தளவுரு ஒன்றின் சுற்றிவர உள்ள நீளம் சுற்றளவு எனப்படும்.
இனி
நாம் ஒவ்வொரு தளவுருக்களின் சுற்றளவுகளை எவ்வாறு கணிப்பது என்று பார்ப்போம்.
முதலில்
செவ்வகம் ஒன்றின் சுற்றளவை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம்.
செவ்வகத்தின்
எதிர்பக்கத்தில்
உள்ள நீளங்கள் , அகலங்கள் சமன் என்பதை ஞாபகப்படுத்தவும் , இந்தச் செவ்வகத்தின் நீளம் = 7 , அகலம் =3 அத்துடன் இதைச் சுற்றி அளந்தால் (7+3+7+3 = 20) ஆகவே இச் செவ்வகத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும்.
செவ்வகத்தின் சுற்றளவு = 2 மடங்கு நீளம்
+ 2 மடங்கு அகலம்
ஆகவே செவ்வகத்தின்
சுற்றளவை காண்பதற்கான
சமன்பாடு .
சதுரம்
ஒன்றின்
சுற்றளவைக்
காணல்
சதுரம்
ஒன்றின் நான்கு பக்க நீளங்களும் சமன் என்பதை ஞாபகப்படுத்துங்கள்.
இந்தச்
சதுரத்தின் நீளம் = 5 , அகலம் =5 அத்துடன் இதைச் சுற்றி அளந்தால் (5+5+5+5 = 20) ஆகவே இச் சதுரத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும்.
ஆகவே சதுரத்தின்
சுற்றளவை காண்பதற்கான
சமன்பாடு .
அடுத்ததாக
நாம்
முக்கோணியின்
சுற்றளவை
எவ்வாறு
காண்பது
எனப்
பார்ப்போம்.
முக்கோணியின் சுற்றளவானது , முக்கோணியின் மூன்று பக்கத்தையும் கூட்டுவதன் மூலம் பெறப்படும்.
உ +
ம்:
உருவில்
உள்ள முக்கோணியின் சுற்றளவு = 9
+ 11 + 10 = 30 cm
அடுத்ததாக
நாம்
வட்டத்தின்
சுற்றளவை
எவ்வாறு
காண்பது
எனப்
பார்ப்போம்.
வட்டத்தின்
சுற்றளவு பரிதி எனப்படும் , உதாரணத்திற்கு கீழே உள்ள வட்டத்தை கருதுக.
ஆரைச் சிறை ஒன்றின் சுற்றளவை அளத்தல்.
தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 01
தமிழ் மொழி மூலக் காணொளி : பகுதி : 02
மாதிரி வினாக்களும் , விடைகளும் :
விடை :
விடை :
விடை :
சிறந்த பதிவு
ReplyDelete