Saturday, October 28, 2017

5. முக்கோணிகளின் ஒருங்கிசைவு



வடிவத்திலும் , அளவிலும் சமனாகவுள்ள ஒன்றுடனொன்று சரியாகப் பொருந்துகின்ற உருக்கள் ஒருங்கிசைவானவை எனப்படும்.

முக்கோண ஒருங்கிசைவு

முக்கோண ஒருங்கிசைவு என்பது , வடிவத்திலும் , அளவிலும் இரு முக்கோணிகளும் சரி சமனாக அமையுமாயின் அம் முக்கோணங்கள் ஒருங்கிசைவு முக்கோணம் எனப்படும்.


ஒருங்கிசைவு முக்கோணங்கள் ஒவ்வொன்றின் மூன்று பக்கங்களும் ஒன்றுக்கொன்று சமனாகும்.
AB = ED

AC = FD

BC = EF
அதேபோல் ஒருங்கிசைவு முக்கோணங்கள் ஒவ்வொன்றின் மூன்று கோணங்களும் ஒன்றுக்கொன்று சமனாகும்.(படத்தில் ஒத்த கோணங்கள் ஒரே வர்ணத்தில் காட்டப்பட்டுள்ளது)

 


ஆகவே முக்கோணிகள் இரண்டு ஒருங்கிசையுமா என அறிய  ஆறு ஒற்றுமையும் (3 பக்கங்களின் நீளமும் , 3 கோணங்களின் அளவும் ) தெரிய வேண்டுமா ?

                    இல்லை
முக்கோண ஒருங்கிசைவிற்கான சந்தர்பங்களை 3 ஒற்றுமையுடன் காணக்கூடிய சந்தர்ப்பங்களை இப்போது பார்ப்போம்.



சந்தர்ப்பம் -01




முக்கோணி ஒன்றின் ஒவ்வொரு பக்கமும் , மற்றைய முக்கோணியின் ஒவ்வொரு பக்கத்திற்கும் சமனாயின் , அவ்விரு முக்கோணிகளும் ஒருங்கிசையும்
 


  
சந்தர்ப்பம் -02


முதலில் அமைகோணம் என்றால் என்ன ?

முக்கோணியின் இரு பக்கங்களுக்கு இடையேயுள்ள கோணம் அமைகோணம் எனப்படும்.

உ+ம்  


 




முக்கோணி ஒன்றின் இரு பக்கங்களும் ,அமை கோணமும் ,மற்றைய முக்கோணியின் இரு பக்கங்களுக்கும் , அமைகோணத்திற்கும் சமனாயின் , அவ்விரு முக்கோணங்களும் ஒருங்கிசைவாகும்.








சந்தர்ப்பம் -03



முக்கோணியொன்றின் யாதாயினும் இரு கோணங்களும் , ஒரு பக்கமும் மற்றைய முக்கோணியின் இரு கோணங்களுக்கும் , ஒத்த பக்கத்திற்கும் சமனாயின் , அவ்விரு முக்கோணிகளும்  ஒருங்கிசைவானவையாகும்.

சந்தர்ப்பம் -04


செங்கோண முக்கோணியொன்றின் செம்பக்கமும் , இன்னொரு பக்கமும் , மற்றைய செங்கோண முக்கோணியின் செம்பக்கத்திற்கும் , இன்னொரு பக்கத்திற்கும் சமனாயின் , அவ்விரு செங்கோண முக்கோணிகளும் ஒருங்கிசைவானவையாகும்.


            காணொளி பயிற்சிகள் : பகுதி : 1


காணொளி பயிற்சிகள் : பகுதி : 2

  

No comments:

Post a Comment