மடக்கையின் சிறப்பியல்பும்,
தசமக் கூட்டும்
மடக்கை
எண்ணொன்றின் தசமதானத்துக்கு இடதுபுறமுள்ள பெறுமானம் சிறப்பியல்பு எனப்படும். வலது புறமுள்ள பெறுமானம் தசமக் கூட்டு எனப்படும்.
அடுத்து நாம்
தரப்படும் ஒரு
எண்ணிற்கான மடக்கையின்
சிறப்பியல்பை எவ்வாறு
கணிப்பது எனப்பார்ப்போம்
:
உ+ம்
:01
உ+ம்
: 02
உ+ம்
: 03
மேலும்
சில உதாரணங்கள் :
அடுத்து நாம்
தரப்படும் ஒரு
எண்ணிற்கான மடக்கை
பெறுமானத்தை எவ்வாறு
கணிப்பது எனப்பார்ப்போம்.
உ+ம்
1 : log106337 இன் பெறுமதியை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம்.
படி 1 : இவ்வெண்ணின்
மடக்கை சிறப்பியல்பை காணல்
: 6337 = 6.337 X 103 ஆகவே சிறப்பியல்பு = 3 ஆகும்
படி 2 : அடுத்து இவ்வெண்ணின் தசமக் கூட்டைக் காண வேண்டும்.
63 இற்கும் 3 இற்கும் நேராக உள்ள பெறுமானம் = 8014 , அத்துடன் 63 நேராகவும் இடை வித்தியாசம் 7 இற்கு நேராக உள்ள பெறுமானம் = 5
ஆகவே
6337 இன் தசமக் கூட்டுப் பெறுமானம் = 8019 ஆகும்.
படி 3 :
இனி வலது பக்கத்தில் சிறப்பியல்புப் பெறுமானத்தையும் , இடது பக்கம் தசமக் கூட்டையும் எழுதினால் மடக்கை பெறுமது கிடைக்கும்.
3
|
8019
|
log106337 = 3.8019
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------
உ+ம்
2 : log100.05723 இன் பெறுமதியை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம்.
படி 1 :இவ்வெண்ணின் மடக்கை சிறப்பியல்பை காணல்: 0.05723 = 5.723 X10-2 ஆகவே சிறப்பியல்பு = -2 ஆகும்
படி 2 : அடுத்து இவ்வெண்ணின் தசமக் கூட்டைக் காண வேண்டும்.
57 இற்கும் 2 இற்கும் நேராக உள்ள பெறுமானம் = 7574 , அத்துடன் 57 நேராகவும் இடை வித்தியாசம் 3 இற்கு நேராக உள்ள பெறுமானம் = 2
ஆகவே
5723 இன் தசமக் கூட்டுப் பெறுமானம் = 7576 ஆகும்.
படி 3 :
இனி வலது பக்கத்தில் சிறப்பியல்புப் பெறுமானத்தையும் , இடது பக்கம் தசமக் கூட்டையும் எழுதினால் மடக்கை பெறுமது கிடைக்கும்.
-2
|
7576
|
--------------------------------------------------------------------------------------
முரண் மடக்கை
தரப்பட்ட மடக்கை எவ்வெண்ணின் மடக்கை எனக் காண்பது முரண் மடக்கை எனப்படும்.
படி -1 : சிறப்பியல்பை
பத்தின் வலுவாக எழுதுதல் = 100
படி -2 : தசமக் கூட்டலின் முரண் பெறுமானத்தை பெறல்.
ஆகவே
முரண் பெறுமானம் : 8533
குறிப்பு : 9315 தெரிவு செய்ய முடியாது, ஏனெனில் இது 9311 ஐ விட பெரிய பெறுமானம்.
Antilog 0.9311 = 8.533 X 100
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
படி -1 : சிறப்பியல்பை
பத்தின் வலுவாக எழுதுதல் = 104
படி -2 : தசமக் கூட்டலின் முரண் பெறுமானத்தை பெறல்.
ஆகவே
முரண் பெறுமானம் : 3268
Antilog 4.5143 = 3.268 X 104= 32680
--------------------------------------------------------------------------------
படி -1 : சிறப்பியல்பை
பத்தின் வலுவாக எழுதுதல் = 10-3
படி -2 : தசமக் கூட்டலின் முரண் பெறுமானத்தை பெறல்.
ஆகவே
முரண் பெறுமானம் : 6035
Thank you very much sir. It's very helpful for me. Shall I have more excersises sir
ReplyDelete