Thursday, November 2, 2017

10 : நேர்மாறு விகிதசமன்



விகிதம் : ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே அலகினையுடைய கணியங்களுக்கு இடையேயான தொடர்பை எளிய வடிவில் விபரித்தல் விகிதம் எனப்படும்.




சந்தர்ப்பம் 1 :  ஒரு கிலோ கேக் தயாரிப்பதற்கு 200 கிராம் சீனி தேவைப்படுமாயின் 4 கிலோ கேக் தயாரிப்பதற்கு எவ்வளவு சீனி தேவை ?


விகிதசமம்

சமனான இரு விகிதங்களை சமப்படுத்தித் தொடர்புபடுத்துவது விகித சமன் எனப்படும்.



                  நேர் விகித சமம்


யாதேனும் இரு கணியங்களில் , குறுத்தவொரு கணியத்தின் விகிதம் அதிகரிக்கும்போது , மற்றைய கணியத்தின் விகிதமும் அதிகரிக்குமாயின் அவை நேர்விகிதசமன் எனப்படும். அவ்விரு கணியங்கள் X , Y எனின்.



                நேர் மாறு விகித சமம்



யாதேனும் இரு கணியங்களில் , குறுத்தவொரு கணியத்தின் விகிதம் அதிகரிக்கும்போது , மற்றைய கணியத்தின் விகிதமும் குறையுமாயின் அவை நேர்மாறு விகிதசமன் எனப்படும். அவ்விரு கணியங்கள் X , Y எனின்.

               காணொளி பயிற்சி 01



9 : முக்கோணிகள் 2



நாம் முன்னைய வகுப்புகளில் முக்கோணியின் பண்புகள் , முக்கோணியின் பரப்பளவு , முக்கோணியின் சுற்றளவு போன்றவற்றை பற்றி அறிந்துள்ளோம்.

இங்கு நாம் குறிப்பாக , இரு சமபக்க முக்கோணி ஒன்றின் பண்புகள் பற்றி ஆராய்வோம்.

இரு சமபக்க முக்கோணிகள்

முக்கோணி ஒன்றின் இரு பக்கங்களும் சமன் எனின் அது இரு சமபக்க முக்கோணி எனப்படும்.

உ+ம் :


         
          இரு சமபக்க முக்கோணியின் பண்புகள்


                 அதே போல்..........................


                காணொளி பயிற்சி - 01


8 முக்கோணிகள் I


       முக்கோணியின் அகக் கோணம் என்றால் என்ன ?


ஒரு முக்கோணிக்கு மூன்று அகக் கோணங்கள் இருக்கும் , இங்கே அவை சிவப்பு,மஞ்சள்,நீல வர்ணங்களால் குறித்துக் காட்டப்பட்டுள்ளது.

                  
                 புறக் கோணம் என்றால் என்ன ? 



சரி நாம் இனி ஒரு முக்கோணத்தின் அகக் கோணத்திற்கும், புறக்கோணத்திற்குமான தொடர்பு என்ன  ?

 ஒரு முக்கோணியின் யாதாயினும் ஒரு பக்கத்தை நீட்டும்போது உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர் கோணங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும்.



காணொளி பயிற்சி - 01 
 
காணொளி பயிற்சி - 02  


காணொளி பயிற்சி - 03  

                          காணொளி பயிற்சி - 04

 
மேலதிக செயன்முறை பயிற்சிகளுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்.

http://www.cimt.org.uk/projects/mepres/book7/bk7i5/bk7_5i6.htm